India
"இந்தியாவை காக்க இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்" : சாமியாரின் சர்ச்சைப் பேச்சு!
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சாமியார்கள், இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், இந்தியாவில் இரண்டாவது குடிமக்கள்தான் இஸ்லாமியர்கள், அவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அண்மையில் கூட உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் பேசிய சாமியார் ஒருவர், "இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடந்து கொண்டால், அவர்களது பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்" என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து புகார் செய்து 11 நாட்களான பிறகே அச்சாமியாரை உத்தர பிரதேச போலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது மீண்டும் மற்றொரு சாமியார், இந்தியா இஸ்லாமிய நாடாகாமல் தடுக்க இந்துக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட சாமியார் எதி சத்யதேவானந்த், "இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க இந்துக்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்துக்கள் அதிகமாக இருந்தால்தான் இந்தியா இந்து பூமியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இமாச்சல் பிரதேச போலிஸார் சாமியாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தச் சாமியார் வேறு யாரும் அல்ல. கடந்த ஆண்டு ஹரித்வாரில் நடந்த சாமியார்கள் மாநாட்டில், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என பேசிய எதி நரசிங்கானந்த் அவரின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!