India
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் அச்சிறுவன் கடந்த 3ம் தேதி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில், 13 வயது சிறுமியை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் அச்சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பிறகு, வீட்டிற்குவந்த தனது பெற்றோரிடம் அச்சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.
கடந்த ஒருவாரத்திற்கு முன்பும் இதேபோன்று புனே ரயில் நிலையம் அருகே பொதுக்கழிப்பறைக்கு சென்ற 12 வயது சிறுமியை அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?