India
“என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? - உங்கள் அஜென்டா என்ன?” : நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்!
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துப் பேசினார். அப்போது, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான்.
இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார். உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், " உள்துறை அமைச்சரே உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள்.
நாங்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? ' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!