India
122 ஆண்டுகளுக்கு பிறகு வாட்டி வதைத்த வெப்பநிலை.. மார்ச் மாத நிலை தெரியுமா? - இந்திய வானிலை ஷாக் தகவல்!
1901 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்ச வெயில் அளவு மார்ச் - 2022இல் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி மாத இறுதி முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தெரியவந்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
இது மார்ச் மாதத்தில் நிலவும் சராசரி கோடைவெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1901-ம் ஆண்டில் பதிவாகிய அதிகபட்ச வெயிலின் அளவு கடந்த 2010-ம் ஆண்டு 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!