India
பேண்ட் ஜிப்பை கழற்றிய நபர்... தர்ம அடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி மாணவி!
மும்பை, விலே பார்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரியில் நடந்த தேர்வை முடித்துவிட்டு அருகே இருக்கும் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியைப் பார்த்ததும் பாலியல் சைகை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு மாணவியை நெருங்கிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி அந்நபரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். பிறகு உடனே இதுகுறித்து போலிஸாருக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த போலிஸாரிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளார். பிறகு காவல்நிலையம் சென்று அவர் மீது புகார் செய்துள்ளார். மாணவியின் இந்த தைரியத்தைப் பார்த்து போலிஸார் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!