India
11 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பந்து.. விளையாடும்போது நேர்ந்த சோகம் !
கேரள மாநிலம், திருச்சூர் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிதின் விடுமுறையில் குழந்தையைப் பார்க்கச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது குழந்தைக்கு ஏராளமான விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
பிறகு விடுமுறையை விடுத்து விட்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், குழந்தை, தந்தை வாங்கி வந்த சிறிய பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அக்குழந்தை பந்தை விழுங்கியதும் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் தீபா, உடனே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடும்போது 11 மாத குழந்தையின் தொண்டையில் பந்து சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!