India
கட்டிவைத்து கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்.. இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த 23ஆம் தேதி தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. அப்போது தம்பதியினரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கே கணவர் திஷா சாலியனை அருகில் இருந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப்பெண் மயக்கமடைந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
பின்னர் அங்கிருந்து தப்பித்த சாலியன் தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து சாலியான் அளித்த புகாரின் பேரில், நியூ மண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு சிறார்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!