India

பாரம் தாங்காமல் குப்புற கவிழ்ந்த சரக்கு கப்பல்.. கடலில் மூழ்கிய 18 கண்டெய்னர்கள்-துறைமுகத்தில் அதிர்ச்சி!

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வங்க தேசத்திற்கு Marine Trust 01 என்ற சரக்கு கப்பல் செல்ல இருந்தது. இந்தக் கப்பலில் 180க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் இருந்தன.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஷியாம் பிரசாத் முகர்ஜி துறைமுகத்திலிருந்து நேற்று காலை இந்த கப்பல் கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. அப்போது கப்பலில் மேலும் கண்டெய்னர்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதனால், பாரம் தாங்காமல் கப்பல் திடீரென சரிந்தது.

இதனால் கப்பல் மீது இருந்த கண்டெயினர்கள் ஒவ்வொன்றாக கடல் நீரில் மூழ்கின. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் உடனே கடலில் குதித்தனர். மேலும் பெரிய சத்தத்துடன் கப்பல் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 18 கண்டெய்னர்கள் கடலுக்கு அடியில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கண்டெய்னர்களில் என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து துறைமுக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை” - TC வழங்கியது காரணமா? : ‘பகீர்’ கடிதம் - நடந்தது என்ன?