India

“ஒவ்வொரு மாசமும் தேர்தல் நடந்தா நல்லாருக்கும்.. ஏன் தெரியுமா?’ : பா.ஜ.க-வை கிண்டலடித்த சுப்ரியா சுலே!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.

இந்நிலையில் 137 நாட்களுக்குப் பிறகு நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவையை ஒத்திவைத்து வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களை உறுப்பினர் சுப்ரியா சுலே, ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடந்ததால்தான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயராமல் இருக்கும் என கிண்டலாகப் பேசியுள்ளார்.

Also Read: “இதைவிட ஒரு பகல்கொள்ளை இருக்க முடியுமா?”- கலால் வரியை 11 முறை உயர்த்தியும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்வா?