India
தவறான நண்பர்களுடன் Instagram-ல் பழக்கம்.. பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
புதுச்சேரி மாநிலம், நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளிச் சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகப் பேசிப் பழகி வந்துள்ளளனர்.
இதையடுத்து கடந்த 18ஆம் தேதி சிறுமியை நந்தகுமார் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அப்போது உடனிருந்த அவரது நண்பரும் அச்சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அச்சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வீட்டில் பதுங்கியிருந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
‘இந்தியாவில் ஆஷஸ் டெஸ்ட்?.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!’
-
‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’
-
பா.ஜ.க ஆட்சிக்குக் காட்டும் விசுவாசமா இது? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
“நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாணவர்களின் கையையும் காலையும் உடைக்கும் விஜய்” : முரசொலி ஆவேசம்!
-
“கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?” - விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!