India
பொதுக் கழிப்பறையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.. உ.பி ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!
உத்தர பிரேதச மாநிலம் பிரதாப்கர் ரயில் நிலையத்திற்கு, கடந்த சனிக்கிழமை 20 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்துள்ளார். அந்தப் பெண் அகமதாபாத் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக காந்திருந்திருக்கிறார்.
அவருடைய கணவர் அருகில் உள்ள கடைக்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது ரயில் மேடையில் இருந்த கழிவறைக்கு இளம்பெண் தனியாக சென்றுள்ளார். அங்கு கூட்டம் நிரம்பியிருந்ததால், டிக்கெட் கவுண்டருக்கு அருகில் நின்றுகொண்டு செய்வதறியாது தவித்து வந்துள்ளார்.
இதனைக் கவனித்த அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து, அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் மர்ம நபரும் உள்ளே சென்று கதவைப் பூட்டியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழிவறையிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்நிலைய போலிஸார், குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
-
“நிர்மல்குமாருக்கு அறிவு இருக்குமானால் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம்” : முரசொலி!
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்