India
சகோதரியிடம் பழகிய வாலிபர் கடத்திக் கொலை.. 4 ஆண்டுகளாக சிக்காமல் தப்பிவந்த இளம் பெண் : பிடிபட்டது எப்படி?
டெல்லியைச் சேர்ந்தவர் சாகர். இவரை கடந்த 2015ம் ஆண்டு நித்தி என்ற இளம் பெண் உத்தர பிரதேசம் கடத்திச் சென்று கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலிஸார் அந்த பெண்ணை தேடிவந்தனர். ஆனால், போலிஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. மேலும் 2018ம் ஆண்டில் இந்த கொலை வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் மாயமாகவே இருந்து வந்தார்.
இதையடுத்து போலிஸார் அந்த பெண்ணை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் அவர் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். இத்தகவலின் அடிப்படையில் உத்தர பிரதேசம் சென்று நித்தியை போலிஸார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அந்த பெண்ணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாகர் என்பவர் நித்தியின் சகோதரியுடன் பழகிவந்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சகோதரியுடன் பழகிவந்ததன் காரணமாக அவரை கொலை செய்ததாக அந்தப் பெண் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!