India

மகன் குடும்பத்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை : உடல் கருகி 4 பேர் பரிதாப பலி : என்ன காரணம்?

கேரள மாநிலம், தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது. அவர் தனது மனைவி இறந்த பின்னர், மகன் முகமது பைசலுடன் சேர்ந்து தங்கிவந்தார். மேலும் மகன் மற்றும் தந்தைக்கு இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை மகன், மருமகன், பேரக் குழந்தைகள் 2 பேர் என அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அனைத்து கதவுகளையும் வெளிப்புறமாகப் பூட்டியுள்ளார். பிறகு ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

திடீரென வீட்டில் தீப்பிடித்ததைப் பார்த்து எழுந்து நான்கு பேரும் கூச்சலிட்டுள்ளனர். இவர்கள் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைப்பதற்கு 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஹமீது வீட்டிற்கு தீ வைப்பதை பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒருவர் பார்த்துள்ளார். இது குறித்து அவர் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக மகன் குடும்பத்தைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வீட்டில் தீ பிடித்தவுடன் யாராவது உடனே தீயை அணைத்துவிடக் கூடாது என தண்ணீர் தொட்டியிலிருந்த தண்ணீரையும் காலி செய்துள்ளார். மேலும் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து தீயை அணைக்க முயன்றவர்களையும் அவர் தடுத்துள்ளார்.

சொத்து தகராறு காரணமாக மகன் குடும்பத்தையே அவரது தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 1990ல் நடந்தது ஆளுநர் ஆட்சி.. ‘The Kashmir Files’ அப்பட்டமான பொய் - விளாசிய முன்னாள் முதல்வர்!