India
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்.. உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடித்து வீட்டிற்குச் சோர்வாக வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவி தன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பள்ளி மாணவியைத் தனது அழைத்து அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த சம்பத்தில் மேலும் ஒரு ஆசிரியருக்குத் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!