India

“ஓவர் ஸ்பீடு வேணாம்.. சொன்னா கேட்டுக்கோ” : ஹூண்டாய் மோட்டார்ஸ் - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்!

சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

சாலை போக்குவரத்து விதிகளை சரிவரக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஒன்றிய அரசின் தகவல் தெரிவிக்கிறது.

வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வேகத்தில் செலுத்த வேண்டியது அவசியம். சாலைகளின் வேக வரம்பை மீறி அசுர வேகத்தில் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும். வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக ஓட்டுவது உயிருக்கு உலைவைக்கும்.

நொடிப்பொழுதில் ஏற்படும் விபத்துகளையும், அதன் விபரீதங்களையும் தவிர்க்கவேண்டும் என்ற சிந்தனையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைபெறச் செய்யவேண்டும். மித வேகம் மிக நன்று!

Also Read: “வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்! : Hyundai Motors & கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்!