India
எங்க ட்ரெஸ் பத்தி யார் புகார் கொடுத்தா? - கேள்வி கேட்ட போலிஸுக்கு பெண்கள் பதிலடி - புதுவையில் பரபரப்பு!
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் வெளிநாடு மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலிஸார் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதில், ``இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக் கூடாது” என்று கூறும் இரண்டு போலிஸாரிடம், ``எங்கள் உடை குறித்து உங்களிடம் யார் புகார் கொடுத்தது?” என்று கேட்கிறார்கள் அந்த பெண்கள்.
அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலிஸார் திணறுவபோல முடிவடைகிறது அந்த வீடியோ. இதனிடையே போலிஸாரின் இந்த செயலுக்கு, பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!