India
24 மணி நேர தொடர் போராட்டம்... 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் குட்டு, விளையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியிலிருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இதையடுத்த ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராக்கள் அனுப்பி சிறுவனின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஆழ்துளை கிணற்று பகுதியைச் சுற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
பின்னர் 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பேரிடர் மீட்புக்குழுவினர் சுரங்கப்பாதை வழியாகச் சிறுவனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!