India
“வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்! : Hyundai Motors & கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்!
சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
சாலை போக்குவரத்து விதிகளைச் சரிவரக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் மட்டும், ஒவ்வொரு 3.5 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
வாகனம் ஓட்டும்போது கட்டாயம் செல்போன் பேசக்கூடாது. இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது. நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும் காவு வாங்கிவிடும்.
கனரக வாகனங்களில் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம் செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும். எனவே, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்!
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்