India
“ஹோட்டல் விடுதியில் அறை எடுப்பதில் தகராறு.. பட்டப்பகலில் ஊழியர் வெட்டி கொலை” : கேரளாவில் நடந்த கொடூரம் !
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் ஊழியராக கடந்த 8 மாதமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் ஹோட்டலில் இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளுடன், உள்ளே புகுந்து சரமாரியாக ஐயப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஐயப்பன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஷ் என்பதும் ஹோட்டல் விடுதியில் அறை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!