India

“மது அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டக்கூடாது!” #BeTheBetterGuy

சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது.

அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் தொலைக்காட்சி - இணைய - சமூகவலைதள விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

சாலை போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஒன்றிய அரசின் தகவல் தெரிவிக்கிறது.

அவற்றில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாட்டில் உள்ள 53 பெரிய நகரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 50% அதிகமான உயிரிழப்புகள் சென்னையில் பதிவாகியுள்ளன.

எனவே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாகத் தவிர்த்து, விபத்துகள் ஏற்படாமல் நம்மையும், சாலைகளில் பயணிப்போரையும் காத்திடுவோம்.

Also Read: "பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது இதைச் செய்யவே கூடாது” - ஹூண்டாய் மோட்டார்ஸ் பிரச்சாரம்! #BeTheBetterGuy