India
பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி, ரூ.1 லட்சம் மோசடி.. மந்திர சடங்குகளை நம்பியவருக்கு நேர்ந்த கதி!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் பவார். இவர் விமான போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஊழியர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் அதற்கு மந்திரங்கள் சொல்லி பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்தப் பேச்சை அவர் நம்பியும், பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையின் காரணமாக ரூபாய் ஒரு லட்சத்தை பங்கஜ் பவாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கண்களை மூடி நான் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து அவரும் கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருந்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அங்கு பங்கஜ் பவார் காணவில்லை. மேலும் அங்கிருந்த ரூபாய் ஒரு லட்சம் பணமும் அங்கு இல்லை.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பங்கஜ் பவாரை தேடி வருகின்றனர்.
Also Read
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!
-
சென்னையில் ரூ.89.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சித்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி