India
ஸ்நாக்ஸ் சாப்பிட்டதால் திட்டிய ஆசிரியர்.. விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி- கடிதத்தில் இருந்தது என்ன?
பெங்களூருவை சேர்ந்த சிறுமி ரம்யா மூர்த்தி. இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளியின் வகுப்பறையில் ரம்யா நொறுக்குத்தீனி சாப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ஆசிரியர் அவரை கண்டித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரும் பெற்றோரை வரவழைத்து மாணவியைத் திட்டியுள்ளார். இதனால் பள்ளியின் தலைமையாசிரியர் மீது மாணவியின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மனவுளைச்சலடைந்த மாணவி நேற்று முன்தினம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் அம்மாணவி எழுதியுள்ளார். இதை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !