India
மோதிரத்திற்காக பெண்ணின் விரலை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கொள்ளையன்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குட்பட்ட அக்ரூ கிராமத்தில் பெண் ஒருவர் நெல் வயல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த நபர் ஒருவர் அவரை வழிமறைத்து நகையைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததால் அவரை கீழே தள்ளியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொள்ளையன் அந்தப் பெண் அணிந்திருந்த மோதிரத்தை கழற்ற முயன்றுள்ளார்.
ஆனால், மோதிரம் வராததால் ஆத்திரமடைந்த கொள்ளையன் விரலோடு வெட்டி எடுத்துக்கொண்டார். பின்னர் காதில் அணிந்திருந்த நகைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்திலிருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!