India
கன்றுக்குட்டியை கூட விட்டு வைக்காத கொடூர இளைஞர்கள்.. ராஜஸ்தானில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்திற்குட்பட்ட சோபாங்கியி என்ற மலைப்பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்த்து ஒரு கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து இந்த இழிவான செயலில் ஈடுபட்ட ஜுபைர், தலிம், வாரிஸ், சுனா ஆகிய நான்கு பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் 22 வயதுக்குட்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி இவர்களது கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடையது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் கன்றுக்குட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேரணியாகச் சென்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!