India
நண்பனை கல்லால் அடித்து கொலை.. வேறு நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய வாலிபர் : அதிர்ச்சி சம்பவம்!
மும்பை நகரத்தில் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் கெய்க்வாட். இவர் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் சுஷாந்த் கெய்க்வாட் என்பவருடன் நட்பாகப் பழகிவந்துள்ளார். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி சேர்ந்து குடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ராகுலுக்கும், சுஷாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஷாந்த் அங்கிருந்த கல்லை எடுத்து ராகுல் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் நண்பனை கொலை செய்து விட்டதாகத் தனது செல்போனில் வேறு நண்பருக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார். பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ராகுல் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சுஷாந்தை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!