India
மனைவியின் ஆதார் கார்டை வைத்து காதலியுடன் ஹோட்டலில் உல்லாசம்: புனேவில் சிக்கிய குஜராத் தொழிலதிபர்!
41 வயதான தன்னுடைய கணவர் மீது மகாராஷ்டிர போலிஸாரிடம் மனைவி கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஹின்ஞிவாடி காவல் நிலையத்தில்தான் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்த புகாரின் படி, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான தனது கணவரின் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார் அப்பெண்.
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி, அவரது SUV காரில் கடந்த நவம்பர் மாதம் GPS கருவியை பொருத்தி அவரை தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறார்.
3 மாதங்களாக எல்லாம் சரியாகவே போய்க் கொண்டிருந்த வேளையில் கடந்த செவ்வாயன்று பெங்களூருக்கு பணி நிமித்தமாக செல்வதாகச் சென்ற தொழிலதிபரின் கார் புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதை GPS மூலம் அறிந்திருக்கிறார்.
உடனடியாக ஹோட்டலை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மறுமுனையில் இருந்த ஹோட்டல் ஊழியர் ‘அவர் தனது மனைவியுடன் வந்திருக்கிறார்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக ஹோட்டலுக்கே சென்று அங்குள்ள சிசிடிவியை பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட அவர் அப்பகுதி போலிஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 419 (மோசடி செய்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விவரம் அறிந்த அந்த தொழிலதிபர் அவருடன் வந்த பெண்ணுடன் சேர்ந்து ஹோட்டலை விட்டு தப்பித்திருக்கிறார். தற்போது அவர்களை இருவரையும் பிடிக்கும் பணியில் போலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
Also Read
-
சமூகநீதிக்கான அரசியலையும் போராட்டத்தையும் நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு.. உங்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் கோவி. செழியன்!
-
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : மக்களவையில் மோடி அரசை Left Right வாங்கிய சு.வெங்கடேசன் MP!
-
“தமிழ்நாடு மக்களுக்கு எப்போது உரிய நிதி கிடைக்கும்?” : சாதனையை சுட்டிக்காட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
“இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை!” : பி.வில்சன் பெருமிதம்!