India
7 ஆண்டுகளாக மெல்ல கொல்லும் விஷம்: மனைவியின் சதியால் கணவன் ஷாக்; கேரளாவில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி
கணவன் மனைவியிடையேயான சண்டைச் சச்சரவுகள் நாளுக்குநாள் பெருகி அது வன்முறையாகி வருவது அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி திருமணத்தை மீறிய உறவு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் கொலை சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்த வகையில் கேரளாவில் உள்ள ஐஸ்க்ரீம் சப்ளை செய்யும் தனது கணவரை கொல்ல 7 ஆண்டுகளாக தொடர்ந்து விஷம் கொடுத்து வந்தது பகீர் கிளப்பியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷும் கோட்டையம் பாலா பகுதியைச் சேர்ந்த ஆஷாவும் கணவன் மனைவி. ஐஸ்க்ரீம் பார்லர்களுக்கு ஐஸ்க்ரீம்களை சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் சுரேஷ்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு கோட்டையத்தில் பாலா பகுதியிலேயே சொந்தமாக வீடுகட்டி குடிபெயர்ந்தார். அதன் பிறகு சுரேஷுக்கும், ஆஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சுரேஷுக்கு தொடர்ந்து உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவருக்கு எந்த பலனும் கிட்டவில்லை. இந்த நிலையில், பணி நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூரில் தங்கியிருந்த சுரேஷுக்கு எந்த உபாதையும் ஏற்படவில்லை.
ஆனால் வீடு திரும்பியதும் பழையபடி அவருக்கு உடல்நலம் சரியாமல் போனது. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் மனைவி ஆஷாவை கண்காணித்தார். மெடிக்கலில் தொடர்ந்து ஆஷா மருந்து வாங்குவதை கவனித்த சுரேஷ் ஆஷாவின் தோழியிடம் விசாரித்ததில் உண்மை தெரியவந்திருக்கிறது.
அதன்படி 2015ம் ஆண்டு முதலே சாப்பிட்டில் ஆஷா தனக்கு மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்து வந்திருக்கிறார். அவ்வாறு செய்தால் தன் மீது எந்த சந்தேகமும் எழாது என ஆஷா திட்டமிட்டதை உணர்ந்த சுரேஷ் இது தொடர்பாக உடனடியாக போலிஸிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அதன் பேரில் ஆஷாவை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!