India
தனுஷ் பட பாணியில் ஏமாற்றி காசு பறிக்க முயற்சி; கூண்டோடு சிக்கிய மோசடி கும்பல்; கர்நாடக போலிஸ் அதிரடி!
பித்தளை காசுகளுக்கு தங்கமுலாம் பூசி விற்பனை செய்ய முயன்ற நபர் உட்பட நால்வரை கர்நாடகாவின் விஜயநகர் மாவட்ட போலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லை. என்னிடம் இருக்கும் தங்கக் காசுகளை வைத்துக் கொண்டு 50 ஆயிரம் பணமாக கொடுக்கும்படி ஹரப்பனஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த நிரஞ்சன் (23) என்ற இளைஞர் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் கேட்டிருக்கிறார்.
மோசடி வேலையாக இருக்குமோ என சுதாரித்துக் கொண்ட ராஜன், தன்னிடம் இருந்த 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஏடிஎம் போய் எடுத்து வருவதாகக் கூறி அப்பகுதி போலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து உடனடியாக விரைந்த குடுகோடி போலிஸார் நிரஞ்சனை பிடித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜன் சந்தேகமடைந்ததை போன்று ஏமாற்றி பணம் பறிக்கவே நிரஞ்சன் எத்தனித்திருக்கிறார் என தெரிய வந்தது.
மேலும், நிரஞ்சனிடம் இருந்த பித்தளை காசுகள், அரை கிலோ நாணயங்களை பறிமுதல் செய்த போலிஸார் இந்த மோசடிக்காக நிரஞ்சனுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் கிரண், ராமன்னா, அபிஷேக் ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!