India

முதலிடத்தில் உத்தர பிரதேச அணிவகுப்பு வாகனம்: இதற்குதான் தமிழ்நாடு அரசின் ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா?

நாட்டின் 73வது குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இன்றைய குடியரசு தின விழாவில் பங்கு பெற்றன.

ஒன்றிய அரசின் 9 ஊர்திகள் உட்பட மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன. மேலும் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

கர்நாடகா நீங்கலாக தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. இது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி காசி விஸ்வநாத ஆலயத்தின் கோபுரம் அடங்கிய அலங்கார ஊர்தி முதலிடம் பிடித்துள்ளது என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தை அடுத்து கர்நாடகா, மேகாலயா ஊர்தி முறையே 2, 3வது இடங்களை பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சில அலங்கார ஊர்திகள் கிண்டலான விமர்சனங்களுக்கு ஆளானது.

ஏனெனில், நாட்டின் விடுதலைக்காக போராடிய வீர, தீரர்கள் அடங்கிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஊர்தியை அனுமதிக்காது, கோவில் போன்றவற்றின் சிலைகளே இடம்பெற்றிருந்தது.

இருப்பினும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் ஊர்திகளை அனுமதிக்காத போதும், சென்னையில் நடந்த குடியரசு தின விழாவின் போது அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெறச் செய்திருந்தார். இதுபோக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அணிவகுப்பு வாகனங்கள் மக்களின் பார்வைக்காக அணிவகுத்துச் சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: “கோமியம் குடிச்சிட்டு ரெடியா இருங்க..” : அட்டாக் செய்யும் பா.ஜ.கவினருக்கு சவால் விட்ட பெண் எம்.பி!