India
காதலை முறித்து கொண்ட காதலி.. WHATSAPP-ல் வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை : விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து சங்கர் ராவ் தனது கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடங்காலாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்குப் பணம், நகைகள், ஆகியவற்றை சங்கர் ராவ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் சங்கர் ராவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அந்த பெண்ணிடம் கேட்ட போது 'உன்னைப் பிடிக்கவில்லை' என கூறியுள்ளார். இதனால் சங்கர் ராவ் மனமுடைந்துள்ளார்.
இதையடுத்து தனது வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தன்னை காதலித்த பெண் பணம், நகை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!