India
"விவசாயிகளை மதிக்காத பா.ஜ.கவுக்கு உ.பி மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்" : அகிலேஷ் பேச்சு!
உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீண்டும் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதனால் சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த பா.ஜ.க எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. ஒன்றிய அமைச்சர்கள் வரிசை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் உத்தர பிரதேசம் வளர்ச்சியடையவில்லை என்றால் மொத்த இந்தியாவும் பின்தங்கிவிடும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவிற்கான கதவு அடைக்கப்பட்டு விட்டதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அகிலேஷ் யாதவ், "விவசாயிகளை பா.ஜ.கவினர் மதிக்கவே இல்லை. அவர்கள் பயங்கரவாதிகள் எனக் கூறி தாக்குதல் நடத்தினர். இது விவசாயிகளைக் கோபமடைய வைத்துள்ளது.
இதற்கு அவர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.கவிற்கான கதவுகளை அடைத்துவிட்டனர். சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !
-
வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவை பழிவாங்குகிறதா அமெரிக்கா ? - நாடாளுமன்றத்தில் திமுக MP ஆ.ராசா கேள்வி !
-
பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!
-
“மோடியிடம் தைரியம் இல்லை... பாகிஸ்தானிடம் சரணடைந்து விட்டாரா?” : ராகுல் காந்தி கடும் தாக்கு!
-
“அமித்ஷாவின் பஹல்காம் கேலிக்கூத்து... மோடி எங்கே இருக்கிறார் ?” : மக்களவையில் ஆவேசமான திருச்சி சிவா MP !