India
டெல்லி குடியரசு தின விழாவில் அணிவகுத்த வியக்கத்தகு அலங்கார ஊர்திகள்; இணையத்தில் வைரல்!
நாட்டின் 73வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட ஒன்றிய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இன்றைய குடியரசு தின விழாவில் பங்கு பெற்றன.
அதில் ஒன்றிய அரசின் 9 ஊர்திகள் உட்பட மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன. மேலும் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
இருப்பினும் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சில அலங்கார ஊர்திகள் கிண்டலான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!