India
இளைஞரை கடத்தி கொலை செய்த ரவுடி.. சடலத்தை காவல் நிலையத்தில் வீசிச் சென்ற கொடூரம்: கேரளாவில் பகீர் சம்பவம்!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக ஷான் பாபுவை தேடிவந்தனர்.
இந்நிலையில், கோட்டையம் காவல் நிலையத்தில், கொலை செய்யப்பட்ட ஷான் பாபுவின் உடலை ரவுடி ஜோமன் வீசிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே தலைமறைவாக இருந்த ரவுடி ஜோமனை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருட்கள் விற்பனையில் இரு கும்பலுக்கு ஏற்பட்டுள்ள முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஜோமன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு ரவுடிகளுக்கும் இடையே பகை இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் ஷான் பாபு, ரவுடி சூரியனுக்கு நண்பர் ஆவார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் ஷாமன் பாவுவை கடத்தி கொலை செய்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!