India
“ஓமிக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம், ஆனால் லேசானது இல்லை” : WHO அதிகாரி சொன்ன ‘பகீர்’ தகவல் !
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தொற்றின் வேகம் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 91 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதித்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதத்திற்கு பிறகு இந்த தொற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 36,265 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து படியாக மேற்கு வங்கத்தில் 15,421 பேருக்கும், டெல்லியில் 15,097 பேருக்கும், தமிழ்நாட்டில் 6,983 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்மை நகரத்தில் மட்டும் ஒரேநாளில் 20,181 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒமைக்ரான் தொற்றும் 2,630ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் ஒன்றிய அரசு தொற்றை கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் சாதாரணமானது அல்ல என உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ் கூறுகையில், “ஓமிக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம், ஆனால் லேசானதாக இல்லை.
நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைந்தது என ஆரம்பகால ஆய்வுகள் தெரிவித்தன. எனினும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் முதியவர்களிடம் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!