India
ATM பரிவர்த்தனை கட்டணம் உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ - இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்!
வங்கி ATM-மில் ஐந்து முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர்த்துப் பிற வங்கி ATM-மில் பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ATM பரிவர்த்தனை கட்டணம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மாற்றியமைக்கப்படுகிறது என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ATM பரிவர்த்தனை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத்தின் படி ஐந்து முறைக்கு மேல் ATM-மில் பணம் எடுத்தால் ரூ.21 கட்டணம் பிடிக்கப்படும். அதேபோல் பிற வங்கி ஏ.டி.எம்கள் பயன்பாட்டைப் பொறுத்தவரைப் பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளையும், சிறு நகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். மாற்றியமைக்கப்பட்ட இந்த நடைமுறை புத்தாண்டான இன்றிலிருந்தே அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!