India
பியூன், வாட்ச்மேன் வேலைக்கு விண்ணப்பித்த 11 ஆயிரம் பட்டதாரிகள்.. பா.ஜ.க ஆளும் ம.பி.யில் அவலம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்ட நீதிமன்றத்தில் பியூன், ஓட்டுநர் மற்றும் வாட்ச்மேன் வேலைக்கு காலியாக உள்ள 15 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் பெற்றது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலியாக உள்ள இந்த 15 இடங்களுக்கு 11 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கூட மத்திய பிரதேச முதல் சிவ்ராஜ் சிங் சவுஹான், "ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்" என தெரிவித்திருந்தார்.
ஆனால் மத்திய பிரதேசத்தில் நடப்பதோ வேறுமாதிரியாக இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதை எடுத்துக்காட்டும் விதமாகவே இது உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 32,57,136. பள்ளிக்கல்வித் துறையில் மட்டுமே 30,600 காலிப் பணியிடங்கள் உள்ளன. உள்துறையில் 9,388, சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் இளைஞர்களை பா.ஜ.க அரசு வீதி வீதியாக வேலை தேடி அலையவிடுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!