India

பால் வேனில் வைத்து மதுபானம் கடத்தல்; போலிஸை கண்டதும் ஓட்டம் பிடித்த கடத்தல்காரர்கள் - சித்தூரில் பரபரப்பு

கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ஆந்திராவில் விற்பதாக இருந்த திட்டத்தை சித்தூர் போலிஸார் முறியடித்துள்ளனர்.

இது தொடர்பாக வந்த தகவலை அடுத்து சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (டிச.,28) மாவட்ட தாலுகா போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியே வந்த பால் வேனை மடக்கிய போது வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடியதால் சந்தேகமடந்த போலிஸார் வாகனத்தை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கில் மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதனையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலிஸார் வேனில் வந்த இருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் கார்த்திக், சுரேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் எண்ணிக்கை 10,000 என்றும், அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "ஆட்சிக்கு வந்தால் ரூ.70க்கு மதுபானம்".. ஆந்திர பா.ஜ.க தலைவரின் சர்ச்சைப் பேச்சு!