India
ஏழை பெற்றோர்தான் டார்கெட்.. பிறந்த குழந்தைகளை விற்கும் மோசடி கும்பல் : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
டெல்லியில் குழந்தைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் டெல்லி காந்தி நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று பெண்கள் பிறந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தையை விற்பனை செய்ய முயன்றவர். இவர்களை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதேபோன்ற மற்றொரு இடத்தில் குழந்தைகளை விற்க முயன்ற மூன்று பெண்களை போலிஸார் கைது செய்தவர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏழை பெற்றோர்களைக் குறிவைத்து, அவர்களின் குழந்தைகளைப் பணக்காரர்களுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரிந்தது. இதற்காக இவர்கள் ரூ. 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் பெற்றதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் யார் யாரிடம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?