India
கல்விக் கடனால் தூக்கில் தொங்கிய மகன்; அங்க வர வசதியில்லை என கண்ணீர் விட்ட பெற்றோர் - மங்களூரில் பரிதாபம்!
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சௌரவ் (19)என்பவர் கர்நாடகாவின் மங்களூர் அருகே சுரத்கல் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது அறை இன்று காலை பத்து மணி ஆகியும் திறக்கப்படாததால் இவரது நண்பர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் செளரவ் (19) இறந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக சுரத்கல் போலிஸார் மற்றும் மங்களூர் மாநகர போலிஸுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மங்களூர் மாநகர போலிஸ் கமிஷ்னர் சசிகுமார் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த மாணவர் தங்கிய அறையில் கடிதம் ஒன்றை படித்து பார்த்திருக்கிறார். அதில் தன் ஏழ்மை நிலையை காரணம் காட்டி வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். அதை கட்ட முடியாது என்றும் கோரி பல்வேறு தகவல்களை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பாட்னாவில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்களோ தங்கள் வறுமையின் பிடியில் இருப்பதால் அங்கு வரும் அளவுக்கு எங்களுக்கு பொருளாதார வசதி இல்லை என்றும் மங்களூருவிலேயே இறுதிச் சடங்குகளை முடித்து விடவும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மங்களூருவில் உள்ள அந்த கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்களும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் செலவிலேயே உயிரிழந்த செளரவ் சடலத்தை பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே மாணவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்விக் கடனை கட்ட முடியாததால் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!