India

மீண்டும் வைரஸ் பாதிப்பு - வேகமெடுக்கும் ஒமைக்ரான்: அடுத்தடுத்து இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தும் மாநிலங்கள்!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று 106 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த புதிய தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மீண்டும் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஒமைக்கரான் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தர பிரதே மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளை முதல் இரவி 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: இது வரலாற்றின் மோசமான காலம்.. ஒமைக்ரான் தொற்று குறித்து பில் கேட்ஸ் கூறிய அதிர்ச்சி தகவல்?