India
“கணவனை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய மனைவி கைது” : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் !
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி.மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவிற்கு வந்து வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவன் காணவில்லை என பீவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் புகார் கொடுத்த பீவியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கணவர் மன்சூர் மாலிக்கை நண்பருடன் சேர்ந்து அவரது மனைவி பீவி கொலை செய்து வீட்டிலேயே புதைத்து காணவில்லை என நாடகம் ஆடியதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
சில நாட்களாகக் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி பீவியை, மன்சூர் மாலிக் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கணவனை அடித்து கொலை செய்து வீட்டிலேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!