India

”மோடி ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு கூட பாதுகாப்பில்லை” -ஒன்றிய அமைச்சரின் பதிலால் வெளியான அதிர்ச்சி தகவல்

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிபின் ராவத் சென்ற AF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை விபத்துகளைச் சந்தித்துள்ளது என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், 5 ஆண்டுகளில் மட்டும் 15 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகளில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்துப் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் அஜய் பட், "கடந்த 5 ஆண்டுகளில் 15 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய 15 விமானங்களில் மூன்று AF Mi - 17V5 ஹெலிகாப்டர்களும் அடக்கம். இந்த வகை விமானத்தில்தான் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அதேபோல் 2017ம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விமான விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த கடந்த 5 ஆண்டுகளில் ராணுவம் மற்றும் விமானப்படையில் இருந்து தலா 7 ஹெலிகாப்டர்களும், கடற்படையைச் சேர்ந்த ஒரு ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகியுள்ளன" என தெரிவித்துள்ளார்.

Also Read: இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!