India

“இதுக்குப்போய் ரூ. 8 லட்சம் அபராதமா?” - தெருநாய்க்கு உணவளித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை!

மும்பையில் என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்பைச் சேர்ந்தவர் அன்சு சிங். இவர் குடியிருப்பில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு உணவு அளித்துள்ளார். இதற்காகக் குடியிருப்பு நிர்வாகம் இவருக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி உணவு வழங்கினால் ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அபராதத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் அன்சு சிங், தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார். இதற்காகத் தினமும் இவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது.

இப்படி கடந்த ஜூலை மாதம் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வந்ததில் தற்போது ரூ. 8 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் இதே குடியிருப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் ஜனவரியில் ஒமைக்ரான் அலை? - தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை!