India
குழந்தை அழுததால் ஆத்திரத்தில் தாய் செய்த விபரீத செயல்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரண்ணி. இவரது மனைவி பிளெஸ்ஸி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருப்பதாகத் தனது கணவரிடம் பிளெஸ்லி தெரிவித்துள்ளார். பிறகு பதறியடித்து வீட்டிற்கு வந்த ரண்ணி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ரண்ணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் தாய் பிளெஸ்ஸியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது சம்பவத்தன்று குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்து குழந்தையை சுவற்றில் தூக்கி எறிந்துவிட்டுத் துணி துவைக்கச் சென்றுவிட்டேன்.
பின்னர் வந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. பிறகு கணவருக்கு தொலைபேசியில் அழைத்து குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாகக் கூறினேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை சுவற்றில் எறிந்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!