India

"தந்தையல்ல நல்ல நண்பர்": ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் மகள் உருக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று முன்தினம் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் ராணுவ மரியாதையுடன் இனுற தகனம் செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் மயானத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்கத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அரவது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

அதேபோல், பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசரகாக இருந்த பிரிகேட்டியர் லிட்டரின் உடலும் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலைப் பார்த்து மனைவி கீதா, மகள் ஆஷனா ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரிகேட்டியரின் மகள் ஆஷனா, "எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். எங்களுக்கு எல்லாம் ஒரு ஹீரோவாக அவர் இருந்தார். எனக்கு 17 வயதாகப் போகிறது. இத்தனை வருடங்கள் அவர் என்னுடன் இருந்துள்ளார். எங்களிடம் விட்டுச் சென்ற மகிழ்ச்சியான நினைவுகளுடன் நாங்கள் வாழ்வோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி கொடுக்கும் போது ஆஷனா, கொஞ்சம் கூட கண்கலங்காமல் மிகுந்த மன உறுதியோடு பேசியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Also Read: இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!