India

CAA-ஐ திரும்பப் பெறுவதற்கான உங்களின் நிலைப்பாடு என்ன? - ஒன்றிய அரசுக்கு தயாநிதிமாறன் MP கேள்வி!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனவா என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம் பின்வருமாறு :

"இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனவா அல்லது அதுகுறித்து ஏதேனும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளனவா என்பதனை தெரியப்படுத்தவும்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாட்டின் சிறுபான்மை பிரிவு மக்கள் தெரிவித்த எதிர்ப்புகளை ஒன்றிய அரசு பரிசீலனை செய்துள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

• இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவர்களின் மனநிலை குறித்தும் பொது மக்களிடம் குறிப்பாக சிறுபான்மைப் பிரிவினரிடம், ஒன்றிய அரசு ஏதேனும் கருத்துக்கேட்பு நிகழ்வோ அல்லது கலந்துரையாடலோ மேற்கொண்டுள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியபடுத்தவும்.

• இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்களிடமிருந்து பெறப்பட்ட எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு அவற்றை பரிசீலனை செய்து இச்சட்டத்தினை திரும்பப் பெற ஒன்றிய அரசு முன்வருமா? என்பதனையும் தெரியப்படுத்தவும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “காலநிலை மாற்றப் பேரழிவில் இருந்து பூமியை காப்பாற்ற கடைசி வாய்ப்பு” : நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு!