India
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலா? வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாசிடிவ்; வெளியான அதிர்ச்சி தகவல்!
ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியம், தென் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி லோக்நாயக் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3476 சர்வதேச பயணிகளிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இதனிடையே, இன்று மாலை கொரோனா மேலாண்மை குழு நீண்ட இடைவேளைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து நிலமையை விளக்க உள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!