India
பரப்பன அக்ரஹார சிறையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை; அதிரடி ரெய்டு நடத்திய க்ரைம் போலிஸார்!
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள அறைகளில் குற்றப்பிரிவு போலிஸார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலிஸார் அங்கு சென்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட பிரபல ரவுடிகளின் அறைகளில் கஞ்சா மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய சிறைச்சாலையில் கஞ்சா விற்பனையாளர்களை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அந்த சிறைச்சாலையில் குற்றப்பிரிவு போலிஸார் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் போலிஸார்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!