India

போட்டிபோட்டு விலையைக் கூட்டிய நிறுவனங்கள்.. Airtel, VI-ஐ தொடர்ந்து Jio ப்ரீபெய்டு கட்டணமும் கடும் உயர்வு!

வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது பிரீபெய்டு திட்டங்களின் கட்டண விலையை 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. நவம்பர் 26ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும் 25 சதவீதம் அளவிற்கு பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தியது.

இந்த நிறுவனங்களின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 79 ரூபாயில் இருந்து, 99 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களிலும் 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஏர்டெல், வோடஃபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ஜியோ போன்களில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த ரூ.75 திட்டம் ரூ.91 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், அன்லிமிடெட் திட்டங்களில் குறைந்தபட்ச கட்டணமான ரூ.129 என்பது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது.

Also Read: PREPAID RECHARGE கட்டணத்தை திடீரென 25% உயர்த்திய ஏர்டெல்.. பயனாளர்கள் அதிர்ச்சி!