India
Ola, Uber ஆட்டோ கட்டணம் அதிகரிக்கும்... ஒன்றிய அரசின் முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் Ola,Uber போன்ற ஆன்லைன் புக்கிங் ஆட்டோக்களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் ஆட்டோக்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் ஆப்லைனிலோ அல்லது நேரிலோ ஆட்டோ சேவையைப் பெறுவதற்கு இந்த வரி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் Ola,Uber போன்ற ஆட்டோ சேவைகளின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் சுமையாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!